அம்மா செய்ய சொன்ன அந்த ஒரு விஷயம் - கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஒடிய விஜய்.
சினிமாவுக்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு தளபதி விஜய் ஓடி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ' வாரிசு' என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.
இதையும் பாருங்க : எப்படி இருக்கிறது லெஜெண்ட்டின் 'லெஜண்ட்' - முழு விமர்சனம் இதோ.
வாரிசு படம்:
மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றிய பிற தகவல்:
இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மாஸ்டர்,பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது படத்தின் வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது.
தளபதி 67 படம்:
மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சினிமாவுக்காக விஜய் வீட்டை விட்டு ஓடி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் அவர்கள் முதன் முதலில் தன்னுடைய தாய், தந்தையிடம் சினிமாவில் நடிக்கும் ஆசை குறித்து பேசி இருக்கிறார்.
கடிதம் எழுதி வீட்டை விட்டு ஓடிய விஜய்:
அதற்கு இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனென்றால், விஜயை ஒரு மருத்துவராக்க வேண்டும் என்பது தான் விஜயின் தாய் ஆசை. இதை அறிந்த விஜய் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து ஓடி விட்டார். இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் விஜயின் தாய், தந்தை. பின் அவர்கள் விஜய்யை தேடி கண்டுபிடித்து அவருடைய சினிமா ஆசைக்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.