ஜேடி – ஜெரி இணைந்து இயக்கி இருக்கின்ற படம் தி லெஜண்ட். சரவணன் அருள் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். மேலும், சரவணன் அருள் தயாரித்து நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்று வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் புகழ் பெற்ற விஞ்ஞானியாக சரவணன் இருக்கிறார். இவர் பல சாதனைகளை செய்து உலக நாடுகளை அதிர வைக்கிறார். அதன் பின் தனது சொந்த ஊருக்கு சென்று தன்னுடைய மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கக் கூடிய விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் இவர் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவருடைய தாத்தா உருவாக்கிய கல்லூரியை எடுத்து நடத்துகிறார். அந்த சமயத்தில் தனது பள்ளி நண்பரான ரோபோ சங்கரை சந்திக்கிறார் சரவணன்.
பின் சரவணனுக்கு தனது நண்பனின் மனைவி மட்டுமல்லாமல் அவர்களுக்கு பிறந்த இரு பிள்ளைகளுக்கும் பிறப்பிலிருந்தே சர்க்கரை வியாதி இருப்பது தெரிய வருகிறது. சர்க்கரை வியாதியால் தினம் தினம் அவதிப்பட்டு வரும் ரோபோ சங்கர் திடீரென ஒருநாள் மரணமடைகிறார். இதனால் சரவணனுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த நோய்க்கான தீர்வை கண்டுபிடித்து இனி பிறக்கும் எந்த உயிருக்கும் சக்கரை வியாதி இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து தீவிர முயற்சியில் ஈடுபடுகிறார் சரவணன்.
இந்த முயற்சியில் சரவணன் வெற்றி கண்டாரா? இல்லையா? வந்த தடைகளை தகர்த்தெரிந்து முன்னேறி சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. முதல் படத்திலேயே மக்களை கவரும் வண்ணம் சரவணன் அருள் நடித்திருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்திலுமே தன்னுடைய முயற்சியை சரவணன் கொடுத்திருக்கிறார். கதாநாயகியாக வரும் கீர்த்தி நடிப்பு ஓகே என்று சொல்லலாம். வழக்கம்போல் நகைச்சுவையால் மறைந்த நடிகர் விவேக் மக்களை கவர்ந்து இருக்கிறார்.
பாலிவுட் நடிகை Urvashi Rautela-வின் நடிப்பு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. படத்தில் வில்லனாக சுமன் வருகிறார். அவர் வழக்கம்போல் கமர்சியல் கதைக்கேற்ப வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். ரோபோ ஷங்கர் நடிப்பு தனித்து நிற்கிறது. சரவணன் அண்ணாவாக நடித்து இருக்கும் பிரபு தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் யோகி பாபு, விஜயகுமார், நாசர், சிங்கம்புலி, அஸ்வத், லதா ஆகியோர் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.
ஆனால், இயக்குனர்கள் ஜேடி -ஜெர்ரியின் இயக்கம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். நன்றாக செல்லும் திரைக்கதையில் தேவையில்லாத பாடல்கள், காட்சிகள் வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சில பாடல்கள் மனதை தொடுகிறது. பின்னணி இசை படத்திற்கு பக்காவாக இருக்கிறது. ஆனால், ரூபனின் எடிட்டிங் ஒர்கவுட் ஆகவில்லை என்று தான் சொல்லணும். மேலும், எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படம் ஏமாற்றம் என்றே சொல்லலாம்.
நிறைகள் :
பின்னணி இசை, ஒளிப்பதிவு பக்கபலம்.
படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிளஸ் எதுவுமில்லை.
குறைகள் :
இயக்கத்தில் சொதப்பல்.
எடிட்டிங் ஒர்க்கவுட் ஆகவில்லை.
கதாநாயகனாக ஆகும் முயற்சியில் சரவணன் அருள் பல இடங்களில் சொதப்பி இருக்கிறார். கதைக்கு அவருடைய நடிப்பு செட்டாகவில்லை.
திரைக்கதையில் தொய்வு.
நடிகைகளின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை.
மொத்தத்தில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.
தி லெஜெண்ட்- ஏமாற்றம்.