99ல் கல்யாணம் 2000ல் ரிஷப்ஷன். அதுவும் விஜய் – ஷாலினி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் – வைரல் புகைப்படம்.

0
1332
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

- Advertisement -

விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க தீவிர பெண் ரசிகையும் உள்ளார். அதில் ஒருவர்தான் நம்ப சங்கீதா. இந்த நிலையில் விஜய்யின் திருமணத்திற்கு பின்னர் விஜய் நடித்த ‘கண்ணுக்குள் நிலவு’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் சங்கீதாவின் ரிசப்ஷன் நடைபெற்றுள்ளது.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த படத்திற்கு பின்னர் தான் ஷாலினி அமர்க்களம் படத்தில் நடித்தார். அப்போது தான் அஜித் மற்றும் ஷாலினிக்கு காதல் மலர்ந்தது. பின்னர் அவர்கள் இருவரின் திருமணம் ஏப்ரில் 20 ஆம் தேதி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement