விஜய் சர்கார் First look போஸ்டரில் இதை கவனித்தீர்களா..? நீங்கள் பார்க்க மறந்த 5 விஷயம்..! சிலிஸ்ட் இதோ

0
3895
sarkar
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் தயாராகி வந்த ‘விஜய் 62 ‘ படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகி விட்டது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்ப்பது வந்த இந்த படத்தின் டைட்டில் ” சர்கார் ” என்று படக்குழு வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

கத்தி படத்தின் முதல் போஸ்டர் போலவே மாஸ் லுக்கில் இருக்கும் விஜய்யின் இந்த ‘சர்கார் ‘ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரில் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்.

1 இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகைப்படத்திற்கு பின்னால் ஒரு சில மாபெரும் கட்டிடங்கள் இருக்கின்றது. இதனால் இந்த படம் பெரிய நகரத்தில் நடக்கும் ஒரு கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

-விளம்பரம்-

2 விஜய் அணிந்துள்ள கை கடிகாரம் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது, ஆகையால் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்பதன் சுவாரசியம் அதிகரிக்கிறது.

3 இந்த படத்தின் போஸ்ட்டரில் விஜய் ஒரு சால்ட் அன் பேப்பர் லுக்கில் தான் இருக்கிறார். மெர்சல் படத்தில் இதே கெட்டப்பில் ஒரு கிராமத்து விஜய்யாக நடித்திருப்பார். ஆனால், இந்த படத்தின் ஒரு ஸ்டைலிஷ் விஜய்யை சால்ட் அன் பேப்பர் கெட் அப்பில் நாம் எதிர்பார்க்கலாம்.

4 சமீப காலமாக விஜய் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றது இல்லை ஆனால், இந்த படத்தின் போஸ்டரில் தனது இடது கையில் லைட்டரை வைத்துக் கொண்டு வாயில் சிகிரெட்டுடன் போஸ் கொடுததுள்ள விஜய், காதில் கடுக்கன் எல்லாம் அணிந்து ஒரு ரப் அன் ஸ்டைலிஷ் கெட்டப்பில் இருக்கிறார்.

sarkar

5 இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்ததிலிருந்தே இந்த படம் ஒரு அரசியல் சம்மந்தபட்ட படம் என்று தான் பல தகவலைகள் வெளியாகி இருந்தன. அதற்கு தகுந்தார் போல படத்திற்கு ‘சர்கார் ‘ என்று பெயர் வைத்துள்ளனர். சர்கார் என்றால் இந்தியில் ‘அரசாங்கம்’ என்று அர்த்தம். அதனால் இந்த படம் கண்டிப்பாக அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்குமோ என்று எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

6 இந்த படத்தில் நடிகர் விஜய்யின் ‘இளைய தளபதி விஜய்’ என்ற பட்ட பெயரை ‘தளபதி விஜய்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதை நீங்கள் அப்படியே படத்தின் பெயருடன் இணைத்து பாரத்தால் ‘தளபதி விஜய் சர்கார்’ என்று வருகிறது . இதனை தமிழில் கூறி பாருங்கள் ‘தளபதி விஜய் அரசாங்கம்’ என்று தான் வருகிறது.

நடிகர் விஜய் இந்த படத்தில் இடது கை பழக்கம் உடையவராக இருக்கலாம், அவர் தனது இடது கையில் தான் லைட்டரை பயன்படுத்தி உள்ளார்.

Advertisement