தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாக இருக்கும் ‘சர்கார்’..! வெளியிட்டு தேதி இது தானா ..!

0
374
Sarkar

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாவதாக இருந்தது.

Vijay

படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வாரத்திற்குள் படம் தணிக்கை குழுவிற்கு சான்றிதழுக்காக அனுப்பபடுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

படத்தின் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிலும் சர்க்கார் படம் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்த தகவலின்படி தீபாவளிக்கு முன்னதாகவே நவம்பர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. நவம்பர் இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை என்பதலும் தொடர்ந்து விடுமுறை என்பதாலும் படத்தை தீபாவளி முன்கூட்டியே வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.