“சர்கார்” டீஸரில் என்ன எதிர்பார்க்கலாம்…! அரசியல் வசனம் இடம்பெற்றுள்ளதா?

0
615
Sarkar
- Advertisement -

விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் டீஸருக்கு தான் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் தற்போதே பல ஹேஸ்டேக்களை உருவாக்கி ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

-விளம்பரம்-

vijaysarkar

- Advertisement -

இதுவரை இல்லாத அளவு இந்த படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற [போது அதில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார். அதன்பின்னர் அவரின் மேடைப்பேச்சுக்கு பலரும் கலவையான விமர்சன கருத்துகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், கூகுள் சி.ஈ.ஓ. சுந்தர் பிச்சைதான் ‘சர்கார்’ படத்தில் இருக்கும் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன். அதனால்தான் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு சுந்தர் என பெயர் வைத்துள்ளேன் என தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

ar-murugadoss

மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். எனவே, இந்த படத்தின் டீஸரை விஜய்யின் ரசிகர்கள் வெறும் டீசராக மட்டும் பார்க்காமல் விஜய்யின் அரசியலுக்கு உதவும் ஒரு அரசியல் டீஸராகவும் இது அமையலாம் என்ற எதிரிபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement