பிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.! யாருக்காக தெரியுமா.!

0
709
- Advertisement -

நடிகை அமலாபால் நடித்த ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் இவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்தின் மூலம் இவர் பேராத புகழை கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமானார்.

-விளம்பரம்-
Vijay-Sethupathi

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் பெற்ற புகழின் மூலம் இவருக்கு யார் பிரேமா காதல் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெறவே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மாபெரும் வரவேற்பும் கிடைத்திருந்து. இந்தப் படத்தைத் தொடர்ந்த தற்போது ஸ்பீட் ராஜாவும் இதய ராணியே என்ற படத்தில் நடித்து வருகிறார் ஹரீஷ் கல்யாண்.

- Advertisement -


இந்த படத்தை கடந்த ஆண்டு (2017) வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித் ஜெய்கோடி இயக்கி வருகிறார். ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ புகழ் ஷில்பா மஞ்சுநாத் டூயட் பாடி ஆடி வருகிறார். ‘மாதவ் மீடியா’ நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் ‘சித்தர்’ என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement