விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் கசிந்தது. மாஸ் அப்டேட்.

0
34015
vjs
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for master audio launch

- Advertisement -

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் பட நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : பாடகிக்கு கொரோனா வைரஸ், அமைச்சர்கள் பீதி. வழக்கு போட்ட நீதி துறை.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் பெயர் ஜான் துரைராஜ் என்றும், விஜய்யின் கல்லுரி ஐடி கார்டும் வெளியாகி இருந்தது.இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் பெயர் வெளியாகியுள்ளது. இந்த பெயர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் கேங்ஸ்டாராக நடித்து உள்ளார்.

இதில் இவருடைய பெயர் பவானி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் பயங்கர ஃபயர் ஆக நடித்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த பெயர் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் அதிகமாக லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Image result for Vijay Master Id

சமீபத்தில் விஜய் சேதுபதி விஜய்க்கு கொடுத்த முத்தமும், விஜய் விஜய் சேதுபதிக்கு கொடுத்த முத்தமும் அனைவருக்கும் தெரிந்தது. இது விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி திகழ்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வேற லெவல் தெறிக்க விட்டது. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement