வாத்தி கம்மிங் பாடலுக்கு பவானி ஆடி பாத்திருக்கீங்களா. இணையத்தில் வைரலாகும் வீடியோ (செம தமாஷா இருக்கு )

By subhashini · 20/11/2021

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

https://twitter.com/mastervijay2020/status/1461981370616586244

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக 'வாத்தி கம்மிங்' பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. அவ்வளவு ஏன் இந்த பாடலுக்கு தான் நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் நடனம் ஆடி இருந்தார்.

இதையும் பாருங்க : உள்ளே போன அபிஷேக், வெளியில் வந்த போட்டியாளர் - இந்த வாரம் எலிமினேஷன் இவர் தான்.

இந்த பாடல் யூடுயூப்பில் 300 மில்லியன்களுக்கு மேல் பார்வையாளராகளை கடந்து இருக்கும் நிலையில் இன்றளவும் இந்த பாடலுக்கான கிரேஸ் சற்றும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடல் வெளியான போதே இந்த பாடலுக்கும் பல்வேறு பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தனர். அவ்வளவு ஏன் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விஜய் சேதுபதி சென்ற போது மேடையில் வாத்தி கம்மிங் பாடல் போடப்பட்டது. இதற்கு விஜய் சேதுபதி நடனமாடிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full