உள்ளே போன அபிஷேக், வெளியில் வந்த போட்டியாளர் – இந்த வாரம் எலிமினேஷன் இவர் தான்.

0
334
BiggBossTamil5
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் வார வாரம் எலிமினேஷனில் போட்டியாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் நதியா சாங் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா ஆகியோர் வெளியேறுகிறார்கள். இதுவரை மொத்தம் 18 போட்டியாளர்களில் 6 பேர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போக போகிறவர் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த வார எலிமினேஷனில் நாமினேட் செய்யப்பட்டவர்கள் நிரூப், இசைவாணி, சிபி, அபினய், தாமரை, பவானி, அண்ணாச்சி, அக்ஷரா, ஐக்கி பெர்ரி ஆவார். இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் இசைவாணி என்றுதகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், பிக்பாஸ் மூலம் இசைவாணி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் ஒரு கானா பாடகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

Bigg Boss 5:Singer Isaivani tears up in the new promo - Tamil News -  IndiaGlitz.com

பஞ்சபூதம் டாஸ்கில் நெருப்பு அதிகாரம் இசைவாணிக்கு கொடுத்திருந்த போது பிற போட்டியாளர்களுக்கும் இவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. குறிப்பாக இசைக்கும் தாமரைக்கும் இடையே பல சர்ச்சைகள் இன்னும் போய் கொண்டிருந்தது. அதிலும் இந்த வாரம் இவர் ரசிகர்களை ரொம்பவே காண்டாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement