டேய் வாடா கட்டி புடிச்சிக்கோ - முகத்தில் இருந்த தேம்பலால் தயங்கி நின்ற நபரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள VJS
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.
https://twitter.com/TJeevakaran/status/1434819073850830849
இதனாலேயே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
இதையும் பாருங்க : படங்களில் கொடூர வில்லி, நிஜத்தில் படு பாச அம்மா - மைனா சூசனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா ?
விஜய் சேதுபதி பல பிரபலங்களுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. மாஸ்டர் பட செட்டில் விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுகொண்டு இருக்கும் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து கையில் முத்தமிட்டார் விஜய் சேதுபதி.
https://twitter.com/TJeevakaran/status/1434819839047061507
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் விஜய் சேதுபதியை சந்தித்து போது நடத்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், 2015 ல மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு இன்டர்வியூ எடுக்க போனேன். ஷூட் முடிச்சுட்டு எல்லோரும் போட்டோ எடுத்துட்டு இருந்தோம். அந்த சமயம் நான் என் கண்ணில் இருக்கிற வெள்ளையை மறைக்க கூலிங்கிளாஸ் தேடிட்டு இருந்தேன். அப்ப விஜய் சேதுபதி அண்ணா டேய் இதுதான் உனக்கு அழகு வாடா இதுவரை யாருக்கும் கொடுக்காத போஸ் எல்லாம் எடுக்கலாம் என்று சொல்லி போட்டோ எடுத்தார். அதுக்கு பிறகுதான் நான் என் கண்ணுல இருக்கிற வெள்ளையை பாசிட்டிவா பார்க்க ஆரம்பிச்சேன் என்று பதிவிட்டுள்ள அவர் அந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்