விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 90 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 9:
இந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருக்கிறார்.
பின் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பார்வதி- கம்ருதீன் செய்திருக்கும் செயல்தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். இதை அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.

கார் டாஸ்க்:
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது.
இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் சேதுபதி, கம்ருதீன் உனக்கு பலமுறை சொல்லி இருக்கேன். இப்படி பேசுறீங்களே அது பார்ப்பவர்களுக்கு நெருடலாக இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்து தம்பி நீ நல்லா பண்ணுனப்பான்னு சொல்லுவாங்க.
https://www.youtube.com/watch?v=dfTbWdi2x8w
பிக் பாஸ் ப்ரோமோ:
பாரு வீட்டுக்கு போனால் உடனே பாராட்டு விழா தான் நடத்தணும். ஒரு பொண்ண எட்டி உதைத்ததை நான் பார்த்து ரசித்தேன் என்று அவங்க அம்மா பாராட்டுவாங்க என்று சொல்லி இரண்டு பேரும் கிளம்புங்க என்று நெட் கார்டை விஜய் சேதுபதி எடுத்து நீட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் எல்லோருமே கைத்தட்டி கொண்டாடுகிறார்கள்.






