பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த புதிய புரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் புரோமோ சூட் பாண்டிச்சேரியில் நடத்தி இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை சேனல் தரப்பில் வெளியாகி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் 8:
மேலும், இந்த நிகழ்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' அருண், ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகர் தீபக், ரவீந்தர், வினோத் பாபு-பவித்ரா, அன்வர், தர்ஷா குப்தா, பரினா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களான காத்து கருப்பு கலை, பிசியோதெரபிஸ்ட் திவாகர் ஆகிய இருவரில் ஒருவர் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 8 நிகழ்ச்சி குறித்த புதிய புரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் 8 ப்ரோமோ:
அதில், ஆரம்பத்தில் விஜய் சேதுபதி கோட் போட்டு நிகழ்ச்சிக்காக தயாராக இருக்கிறார். அங்கு வந்த டைலர், சார் பர்ஃபெக்ட்டா இருக்கிறீங்க என்று சொல்ல, விஜய் சேதுபதி அப்படியா என்று கேட்கிறார். அதற்கு பின் விஜய் சேதுபதி காரில் நிகழ்ச்சிக்கு போய்க்கொண்டிருக்கும் போது டிரைவர், சார் நிகழ்ச்சிக்கு கார் வலம் போனால் போகாது ஊர்வலம் போகணும் என்று டிப்ஸ் கொடுக்கிறார். அதற்குப் பின் விஜய் சேதுபதி ஒரு பூங்காவில் வாக்கிங் போகிறார். அப்போது பெரியவர்கள் விஜய் சேதுபதியை நிறுத்தி, நீங்க குருப்பீசம் பண்றவங்க, டாமினேட் பண்றவங்க எல்லாரையும் ஓடவிட வேண்டும் என்று சொல்ல, விஜய் சேதுபதி சரி என்று தலையை ஆட்டிக் கொள்கிறார்.
நிகழ்ச்சி குறித்து சொன்னது:
அதற்குப் பின் விஜய் சேதுபதி மார்க்கெட்டில் தக்காளி வாங்கிக்கொண்டு இருக்கிறார். அப்போது காய்கறி விற்கும் பெண், தம்பி தக்காளியில் நல்லது எது? கெட்டது எது? என்று பார்த்தாலே தெரியும். ஆனால், மனிதர்களில் நல்லவங்க யாருன்னு கண்டுபிடிப்பது கஷ்டம் என்று சொல்கிறார். பின் கிரவுண்டில் சிறுவர்கள் புட்பால் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு சிறுவன், இளநீர் குடித்திருக்கும் விஜய் சேதுபதியை கூப்பிட்டு, அங்கிள் தப்பா விளையாடினால் எப்போ ரெட் கார்ட் கொடுக்கணும்னு தெரியும்ல, தெரியலனா என்னை பார்த்து கத்துக்கோங்க என்று சொல்கிறார். விஜய் சேதுபதி பஸ்ஸில் பயணிக்கிறார். அப்போது பஸ் கூட்டமாக இருக்கும் போது அங்கு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு சீட் கொடுத்து எழுந்து நிற்கிறார்.
https://www.youtube.com/watch?v=o_476XcuNu4
மேடையில் விஜய் சேதுபதி சொன்னது:
அதற்கு அங்கிருந்த இளைஞர்கள், ப்ரோ உங்க இளகன மனசு எல்லாம் 12 Bக்கு ஓகே BBக்கு வேண்டாம் என்று சொல்ல விஜய் சேதுபதி தலையை ஆட்டிக் கொள்கிறார். தெருவோரக் கடையில் உட்கார்ந்து விஜய் சேதுபதி மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பெண், தம்பி வாழைக்காய் பஜ்ஜி மாதிரி வளவளன்னு பேசாமல் மிளகா பஜ்ஜி மாதிரி சுருக்குன்னு கேட்கணும் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து சலூனில் விஜய் சேதுபதி முடி வெட்டும் நபரிடம், என்னடா பம்முற, உனக்கும் ஏதாவது கருத்து இருக்கா என்று கேட்க, ஆமான்னு வீக் எண்டு டேஸ்ல நல்லவன் மாதிரி பண்ணுவாங்க. ஆனா,வீக் டேஸ்ல எகுருவாங்க, உஷாரா இருங்க சார் என்று சொல்கிறார். பிறகு விஜய் சேதுபதி பிக்பாஸ் மேடைக்கு வந்து, முதலில் தளத்தில் இறங்கணும். நம்ம இலக்கு என்னன்னு தெரிஞ்சுக்கணும், அதுக்காக கடினமா உழைக்கணும். உங்களுக்கு விருப்பமான ஷோவை இன்னும் நெருக்கமாக கொண்டு வர பிக் பாஸ் 8. இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்று சொல்லி சிரிக்கிறார்.






