இந்த மாதிரி ஒரு அரசியல ரொம்ப நாளா பாக்கல – ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷை புகழ்ந்த விஜய் சேதுபதி.

0
1157
vjs
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 100 நாள் பயணம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-
திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பிராச்சாரத்தில் திடீர் மயக்கம் | Trichy: Anbil Mahesh Poyyamozhi sudden  Dizzy in election campaign ...

அதற்கு அவர் கூறியது, மிகவும் அருமையாக இருக்கிறது.நான் எப்போதும் சட்ட சபையில் நடக்கும் வீடியோக்களை பார்ப்பேன். தற்போது நடக்கும் சட்டசபை சாதாரணமாக, அருமையாக, நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னாடியும் வீடியோ பார்த்தேன். ஆனால், நான் அந்தளவிற்கு பாக்கமாட்டேன். அப்போது நான் சண்டை வீடியோக்களை பார்ப்பேன். இந்த முறை சட்டசபை வீடியோக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. தயவுசெய்து எல்லோரும் பாருங்கள்.

இதையும் பாருங்க : சிவாலயத்திற்குள் செருப்பு போட்டு சென்ற திரிஷா – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம். மணிரத்னத்தை கைது செய்ய வேண்டும் என்று புகார்.

- Advertisement -

நான் ஆதரவுக்காக பாருங்கள் என்று சொல்லவில்லை நம் தமிழ்நாட்டின் சட்டசபையில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கும் தெரியும். அது மட்டுமில்லாமல் சட்டசபை வீடியோ குறித்து பலரும் கீழே நல்லவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி பதில் சொல்லுவதும் ஆளுங்கட்சி கேட்கும் கேள்விக்கு எதிர்க்கட்சி பதில் சொல்லுவதும் மிக இயல்பாக இருக்கிறது.ஒரு படம் பார்ப்பது போல் சட்டசபையில் நடக்கும் நிகழ்வு இருக்கிறது. அதிலும் அன்பில் மகேஷ் அவர்கள் சொல்லியிருந்தது அற்புதமாக இருந்தது.

பள்ளி படிக்கும் மாணவர்களின் பையில் அம்மா புகைப்படத்தை எடுத்துட்டு தற்போது ஆளுங்கட்சியின் புகைப்படத்தை பதிவிட்டால் 13 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் அதை எடுக்க வேண்டாம் என்று அந்த 13 கோடி மாணவர்களின் மற்ற தேவைகளுக்கு செய்யலாம் என்று முதலமைச்சர்களின் முடிவு அருமையான செயல். அதேபோல் அம்மாவின் உணவகத்தை அடித்து நொறுக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததும், அதை சரி செய்ததும் அற்புதமான விஷயம். இது பாராட்டுக்குரிய விஷயம் என்று சொல்லவில்லை ஒரு முதலமைச்சருக்கான தகுதி அவரிடம் உள்ளது என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி அவர் பகிர்ந்துகொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement