நீங்கெல்லாம் ஆப்போனேட் கூடதா கிளாஷ் விடுவீங்க, ஆனா அவரு அவருக்கே கிளாஷ் உட்டுப்பாரு - vjs மீம்ஸ் தொகுப்பு.

By Rajkumar · 13/9/2021

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் தயாராகி இருக்கிறது.

ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வருவதே தமிழ் சினிமாவில் பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது ஒரு வாரத்தில் மட்டும் விஜய்சேதுபதி நடிப்பில் 4 படங்கள் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லாபம். இந்த படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்களில் வெளிவந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கிற்கு முதலில் வெளிவந்த படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்லணும்.

பின் செப்டம்பர் 10-ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கத்தில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படத்தை சன் தொலைக்காட்சியில் நேரடியாக முதல் முறை ஒளிபரப்பு செய்தார்கள். அதேநாளில் நெட்பிளிக்ஸ் வலைத்தளத்திலும் இந்த திரைப்படம் வெளியானது.

இதையும் பாருங்க : ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாக நடந்து கொண்டதாக அர்ஜுன் மீது அளிக்கப்பட்ட புகார். கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு

மேலும், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் சோனி லீவ் வலைதலத்தில் வெளியாகி உள்ளது. இந்த மூன்று திரைப்படங்களும் ஒரே வாரத்தில் வெளியாகி உள்ளது. அதோடு செப்டம்பர் 17ஆம் தேதி தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி படம் ஹாட்ஸ்டார் வலைதலத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாவது அடுத்து ரசிகர்களும், நெட்டிசன்களும் சோசியல் மீடியாவில் பயங்கர மீம்ஸ்களைப் போட்டு கிண்டலடித்து உள்ளனர். தற்போது விஜய் சேதுபதி தான் சோசியல் மீடியாவில் வலம் வருகிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவரை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full