ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாக நடந்து கொண்டதாக அர்ஜுன் மீது அளிக்கப்பட்ட புகார். கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு

0
5797
arjun
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
Shruthi arjun

இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், விஸ்மயா (தமிழில் ‘நிபுணன்’) படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்தபோது, நானும் அவரும் நெருங்கி நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. அந்தக் காட்சியை படமாக்குவதற்கு முன்பாக, படப்பிடிப்புத் தளத்தில் அனைவரது முன்னிலையிலும், அர்ஜுன் எனது அனுமதியின்றி என்னிடம் நெருக்கமாக வந்து என்னைத் தொட்டார்.

இதையும் பாருங்க : கோவிலுக்கு சென்ற மோகன் லால் செய்த செயலால் 3 கோவில் ஊழியர்கள் பணி நீக்கம்.

- Advertisement -

அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது என்று பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து நடிகர் அர்ஜுனும், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது போலீசில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  நடிகர் அர்ஜுனின் சார்பாக அவரது உறவினரும் கன்னட நடிகருமான மறைந்த நடிகர் துருவா சார்ஜா பெங்களூர் சிவில் நிதிமன்றத்தில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு தொடந்தார்.

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி படக்குழுவினருக்கு பல முறை காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஆஜராகாத நிலையில், மீண்டும் நிபுணன் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குனர் அருண், அரவிந்த் உள்ளிட்டோரை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

-விளம்பரம்-

Advertisement