தல அஜித்துடன் படம் எப்போது..!ரசிகரின் கேள்விக்கு விஜய் சேதுபதியின் அசத்தல் பதில்..!

0
120
Ajithvijaysethupathi

தமிழ் சினிமாவில் அணைத்து நடிகர்களின் ரசிகர்கர்களாலும் விரும்பப்படும் வேறு ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்கள் வெற்றியின் லிஸ்டில் தான் சேர்க்கிறது.

நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதே போல இவர் நடித்த மல்டி ஸ்டார் படங்கள் அனைத்தும் பெரிதும் ஹிட் அடைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதியிடம் தல கூட நடி தல என்று ரசிகர்கள் ஆரவாரக்குரலில் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, சான்ஸ் கொடுத்தா சந்தோஷம் என்று  விஜய் சேதுபதி பதிலளித்தார். இதனை கேட்டு ரசிகர்கள் அரங்கம் அதிர ஆராவாரம் செய்தனர்.