தமிழ் சினிமா உலகில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திற்கு சென்று இருந்தார்.. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு விஜய்சேதுபதியை எட்டி உதைத்த மகா காந்தி பேட்டி கொடுத்து இருந்தார். அதில், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொல்ல மகா காந்தி சென்றிருக்கிறார்.

பிறகு அவர் குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு? என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விஜய்சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் விஜய் சேதுபதியை உதைத்ததாகவும் மகா காந்தி பேட்டியில் கூறியிருந்தார். இப்படி இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் சோஷியல் மீடியாவில் வந்திருக்கிறது. விமான நிலையத்தில் என்ன தான் நடந்தது? என்று எல்லோரும் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளித்துள்ளார்கள்.

Advertisement

அதில் , என்னை தாக்கிய நபர் குடிபோதையில் இருந்து இருந்தார். அவர் மாஸ்க் அணிந்து இருந்தால் அவர் முகம் வெளியே தெரியவில்லை. பின் செல்போனில் ஒருவர் வீடியோ
எடுத்த விவகாரம் ஊதி பெரிதாக்கபட்டதனால் கலவரம் ஆகி என்னை தாக்கிய நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பிரச்சனை தீர்க்கப்பட்டது. அதோடு நான் எந்த ஒரு பாதுகாவலர்களுடன் பயணம் செய்யவில்லை. நான் என்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் சென்றேன். பாதுகாவலரை வைத்துக்கொள்ள எனக்கு விருப்பம் கிடையாது. நான் மக்களை சந்தித்து பேச தான் சென்றேன் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார். இப்படி இவர்கள் இருவருடைய கருத்து முரண்பாடாக இருக்கிறது. பொதுவாகவே பொது வெளியில் தெரியாத நபரிடம் குருபூஜை பற்றி பேசுவது அத்துமீறல். குருபூஜை என்பது ஒரு தனிப்பட்ட ஜாதியினர் நிகழ்த்தும் நிகழ்வு. அதில் கலந்து கொள்ள போகிறீர்களா? என்று கேட்பது தவறான ஒன்று.

அது மட்டுமில்லாமல் அதில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் அத்துமீறி நடந்ததால் காவல்துறை பல பேரை கைது செய்து இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் விஜய் சேதுபதியை அந்த நபர் தாக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட ஜாதியினர் உடைய ஆதரவு கிடைப்பதற்காகவும், விஜய் சேதுபதிக்கு எதிராக திருப்பி விடுவதற்காகவும் தான் அந்த நபர் குருபூஜை குறித்து கேட்டதாக சொல்வதெல்லாம் பொய் என்றும் கூறப்படுகிறது. உண்மையாலுமே அந்த வீடியோவை பார்க்கும் போது விஜய் சேதுபதி மீது எந்த தவறும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தாக்க வந்த நபர் வன்மத்துடன் விஜய்சேதுபதியை தாக்கி இருக்கிறார். இது குறித்து விஜய் சேதுபதி அந்த நபர் மீது வழக்கு தொடர்ந்து இருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. இது முழுவதும் ஜாதி திணிப்பு பெயரில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement