விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான மனிதர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பினல் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது.

மேலும், இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்து வெளியான படம் 'மகாராஜா'. இந்தப் படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்திருக்கிறது. இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ஆகும். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, மிஸ்கின் இயக்கும் ட்ரெயின், வெற்றிமாறன் இயக்கும் விடுதலை பாகம் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் 8 :
இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகியதால் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார்.

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி:
அனால், கமல் அளவுக்கு விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா என மக்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், அதற்கெல்லாம் முதல் எபிசோடிலேயே விஜய் சேதுபதி மாஸ் காட்டி பதிலடி கொடுத்திருந்தார். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். இந்த நிலையில் புது ட்விஸ்டாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விஜய் சேதுபதி மகன் சூர்யா:
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா , தற்போது பீனிக்ஸ் என்கிற படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசுதான் இயக்கியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் சூட்டிங் முடிந்து, ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஃபீனிக்ஸ் படம்:
அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது படத்தின் ப்ரோமோஷன்க்காக செல்ல உள்ளாராம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு சென்றால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது ஈசியாக ரீச் ஆகிவிடும். அதனால், நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் படங்களை ப்ரொமோட் செய்வதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது வழக்கம் தான். அதனால், தற்போது விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் போட்டியாளராக செல்லாமல், தனது பீனிக்ஸ் படத்தை ப்ரொமோட் செய்ய பிக் பாஸ் வீட்டுக்குள் விரைவில் செல்ல உள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.






