விஜய்யின் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? அவரே கொடுத்த விளக்கம்

0
1346
- Advertisement -

விஜய்யின் லியோ படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

- Advertisement -

விஜய் திரைப்பயணம்:

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் கதை மற்றும் வசனம் எழுதுவதில் பணியாற்றி வருகிறார்கள். இதற்கு முன் இவர்கள் மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் பணியாற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் என்றாலே எல் சி யு என்று கூறுவார்கள். அதனால் தளபதி விஜயின் லியோ படமும் எல்சியுவில் இடம்பெறுமோ? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த முழு சர்ச்சைக்கும் காரணம் லியோ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி வரும் ரத்தினகுமார் தான். சமீபத்தில் இவர் தனது லிட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்த கண்ணாடியை பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி கொடுக்க விளக்கம்:

இதை வைத்து தான் ரசிகர்கள் பலரும் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றெல்லாம் வதந்திகளை பரப்பி விட்டார்கள். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், நான் லியோ படத்தில் நடிக்கவில்லை. தயவு செய்து இது குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம். ரத்தினகுமார் எதற்காக அந்த கண்ணாடி படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் என்று எனக்கு தெரியாது. லியோ படத்தில் நான் நடிப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனியாக என்னால் பதில் சொல்ல முடியாது. அதனால் தான் இந்த விளக்கத்தை கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement