மேடையில் எச்.ராஜாவை கலாய்த்த விஜய் சேதுபதி.! என்ன இப்படி சொல்லிட்டார்

0
363
vijay-sethupathi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். சமீபத்தில் “96” படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதியிடம், இதுகுறித்து கேட்கப்பட்ட போது எச் ராஜாவை கலாய்த்து பதில் அளித்திருந்தார்.

- Advertisement -

பொதுவெளியில் பேசிவிட்டு அட்மின்தான் காரணம் என்பது டிரெண்டாகி விட்டது – விஜய்சேதுபதி

பொதுவெளியில் பேசிவிட்டு அட்மின்தான் காரணம் என்பது டிரெண்டாகி விட்டது – விஜய்சேதுபதி #VijaySethupathi #96TheMovie #Trisha

Posted by புதிய தலைமுறை on Saturday, September 29, 2018

சமீபத்தில் பா ஜா சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போலீசாரை அவதூறாக பேசியும், உச்ச நீதி மன்றத்தை தரை குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது.

ஆனால், அந்த காட்சியில் அவ்வாறு நான் பேசவே இல்லை என்று கூறியிருந்தார் எச் ராஜா. இதனை குறிப்பிட்டே நடிகர் விஜய் சேதுபதி என்னுடைய வீட்டிலும் ரெய்டு நடக்கவில்லை என்னுடைய வீட்டை போலவே செட் அமைத்து ரெய்டு நடத்தப்பட்டது என்று கிண்டலாக பதில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement