சூப்பர் ஸ்டார் மருமகனுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.! எந்த படம் தெரியுமா.!

0
1145
Vijaysethupathi
- Advertisement -

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். இதுவரை காமெடி, ஆக்ஷன், லவ் என்று பல கதாபாத்திரத்தில் அசத்திய விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதி தான் அனைவரின் பேவரைட்.

-விளம்பரம்-

குறிப்பாக விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் வெளியான பேட்ட படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் வில்லனாக அசத்தவுள்ளார் விஜய் சேதுபதி. ஆனால், தமிழில் இல்லை தெலுங்கில்.

- Advertisement -

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்னவ் தேஜ் தற்போது தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை சுகுமார் இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பஜ்ஜி பாபு என்பவர் இயக்க இருக்கிறார். அவருக்கும் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் பஞ்ச வைஷ்னவ் தேஜ்ஜிற்கு ஜோடியாக மனிஷா ராஜ் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்கிறராம். விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சாய்ரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement