முழு நேர நடிகராக மாறி வரும் விஜய் சேதுபதியின் மகன் – வாய்ப்பு கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர்.

0
810
vjs
- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடிகருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனை நல்ல விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி இண்டர்நேஷனல் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் கமல், பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

- Advertisement -

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடிக்க உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் மகன்:

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. இவர் ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் சூர்யா சேதுபதி நடிக்க இருக்கிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

விடுதலை படம்:

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு வருவதால் படப்பிடிப்பு தாமதமாகிறது. தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். வடசென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றிப் பட வரிசையில் விடுதலை படமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை படத்தில் சூர்யா சேதுபதி:

இந்நிலையில் விடுதலை படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவருடைய மகன் சூர்யா சேதுபதி நடிக்க வைப்பதற்கு வெற்றிமாறன் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விடுதலை படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே வெற்றிமாறன் அளித்த பேட்டியில் படத்தின் ஹீரோ சூரி என்றும், கதையின் ஹீரோ விஜய் சேதுபதி என்றும் கூறியிருந்தார்.

Advertisement