விஜய், ஷாருக்கஹான் திடீர் சந்திப்பு இனணையத்தில் வைரலாகும் புகைபடம்…

0
116
- Advertisement -

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
varisu

வாரிசு :-

- Advertisement -

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.

இயக்குனர் அட்லி :-

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

தொடர்ந்து வெற்றியை குவித்த விஜய்-அட்லி காம்போ :-

ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

ஜவான் :-

அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ
ரோல் :-

இப்படி விஜய் நடிக்கும் வாரிசு படமும் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் இந்த இரு படத்தின் இயக்குனர்களும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முறமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.ஆனால் சமீபத்தில் இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கும் ஜாவான் படத்தில் ஒரு கேமியோ ரோல் கொடுப்பதாக செய்திகள் இணையத்தில் கசிந்து கொண்டிருந்தனர். தற்பொழுது நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜயின் இருவரும் சந்தித்துக் கொண்டது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால் பலரும் இந்த புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம் இது இது போலியான புகைப்படம் என்றும் அதிகாரப்பூர்வமான அறிக்கை வரும் வரை காத்திருங்கள் என்றும் நெட்டிசன்கள் பலர் அறிவுறுத்தியும் வருகிறார்கள். நாமும் ஜவான் படத்தில் விஜய் நடிக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement