ராகுல் காந்தி அணிந்த அதே Brandஆ ? – விஜய்யின் சட்டை விலை எவ்ளோ தெரியுமா ?

0
956
- Advertisement -

பீஸ்ட் திரைப்படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் தான் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு, இப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. இப்பாடல் வெளியானது முதலே பாடலானது காப்பியடிக்கப்பட்டது என்று பாடலில் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனம் சரியில்லை என்று பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

-விளம்பரம்-

வாரிசு படத்தின் தயாரிப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் திடீரென ஆந்திராவில் இப்படமானது வெளியிடக்கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை பனையூரில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. கடந்த ஐந்து வருடங்களாக கொரோன மற்றும் தொடர் படபிடிப்பின் காரணமாக பிஸியாக இருந்த விஜய் தற்போது வாரிசு படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார்.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில் பனையூரில் உள்ள ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளும், ரசிகர்களும் இன்று காலை முதலே கூடத்தொடங்கினர். மேலும் விஜய்யை சந்திக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டு தனியார் நிறுவனத்தின் பாதுகாப்புப்படை காவலில் அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் பனையூர் வந்த நடிகர் விஜய்யை மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் ஆராவாரத்துடன் வரவேற்றிருந்தனர்.

மேலும் விஜய் இந்த சந்திப்பில் மற்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசி ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரிசு திரைப்படமானது நடிகர் அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்துடன் ஒன்றாகா வெளியிடப்படுவதால் பல சிக்கல்கள் ‘வாரிசு’ பட குழுவிற்கு எழுந்த வரும் போது நடிகர் விஜய்யின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விஜய் அணிந்து இருக்கும் வெள்ளை சட்டையின் விலை பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. விஜய் அணிந்து இருக்கும் சட்டையின் Brand, BURBERRY என்ற நிறுவனத்துடையது. சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டி- சர்ட் விலை BUR BERRY என்கிற பிராண்டு வகை சாந்தது என்றும், அதன் விலை 40 ஆயிரம் என்றும் கூறியது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது. இறுதியில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டி சர்டை தான் ராகுல் காந்தி அணிந்ததாக விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைத்தது.

இப்படி ஒரு நிலையில் இன்று நடிகர் விஜய் அணிந்து வந்ததும் அதே BURBERRY பிராண்ட் வகை வெள்ளை சட்டையை தான். சட்டையில் அந்த பிராண்ட் லோகோ தெளிவாக தெரியும் வகையில் அந்த சட்டை காணப்பட்டது. இணையத்தில் நடிகர் விஜய் அணிந்த அதே வகையான சட்டை விலையை தேடிய போது அதன் விலை நம் புருவத்தை உயரச்செய்தது Burberry ப்ராண்டை சார்ந்த Sherwood stretch cotton poplin என்கிற வகையினை சார்ந்த அந்த சர்ட்டின் விலை 32ஆயிரத்து 790 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement