தெறி ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது தங்கையுடன் விஜய் மகன் – Unseen புகைப்படம் இதோ.

0
2992
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

விஜய் மகள் திவ்யா, விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து இருந்தார். அதே போல விஜய் மகன் சஞ்சய், சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார். விஜய் மகளுக்கு பேட்மிட்டன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம். ஆனால், விஜய் மகனுக்கு சினிமாவில் தான் ஆர்வம் அதிகம்.

- Advertisement -

அதனால் தான் ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியது.

இப்படி ஒரு நிலையில் தெறி படத்தின் போது நடிகர் மொட்ட ராஜேந்திரனுடம் விஜய் மகள் மற்றும் மகள் எடுத்த புகைப்படம் ஒன்றை மொட்ட ராஜேந்திரன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தில் திவ்யா அணிந்து இருக்கும் வெதர் கோட், தெறி படத்தின் கிளைமாக்சில் அணிந்த அதே கோட் தான். எனவே, இந்த புகைப்படம் தெறி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல தான் தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement