கனடாவில் வேஷ்டி சட்டை அணிந்து, தேசிய கொடியை பிடித்து குடியரசு தினத்தை கொண்டாடியுள்ள விஜய் மகன்.

By Rajkumar · 26/1/2020

இந்தியா முழுவதும் இன்று ஜனவரி 26ம் தேதியை முன்னிட்டு 71 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறார்கள். குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குடியரசு நாளை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் இளையதளபதி என்று அழைக்கப்படும் விஜயின் மகனான சஞ்சய் வெளிநாட்டில் குடியரசு தினத்தை கொண்டாடி உள்ளார் .

நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடனமாடியிருந்தார்.அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இன்னும் அர்ஜுன் ரெட்டி போதைலயே இருக்காரு. விஜய் தேவர்கொண்டாவின் விளம்பரத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த 'சிரி ' என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த குறும்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் கனடாவில் தனது கல்லூரியில் சஞ்சய், வேட்டி சட்டை அணிந்து கொண்டு தேசிய கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க விஜய் மகன் சஞ்சய் படிப்பை முடித்துவிட்டு கனடாவிலிருந்து திரும்பியதும் சினிமாவில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவியது. இதற்கு முக்கிய காரணமே விஜயின் தீவிர ரசிகரும் விஜய் குடும்பத்தாருக்கு மிகவும் நெருங்கிய நபரான மகேஷ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சஞ்சை அடுத்த ஆண்டு சினிமாவில் கால் பதிப்பார் என்று கூறி இருந்தது தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full