இன்னும் அர்ஜுன் ரெட்டி போதைலயே இருக்காரு. விஜய் தேவர்கொண்டாவின் விளம்பரத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.

0
14998
vijay-devarkonda
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது விஜய் தேவரகொண்டா அவர்கள் புதியதாக ஒரு வீட்டை வாங்கி உள்ளாராம். மேலும், அந்த வீடு பார்ப்பதற்கே பயமாக உள்ளது என்றும் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப் படமான ‘நுவ்விலா’ என்ற படத்தின் மூலம் தான் விஜய் தேவரகொண்டா சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் காதல், நகைச்சுவை படமாக “பெல்லி சூப்புலு” படம் வந்தது. மேலும்,இந்த படம் அந்த வருடம் வந்த பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக இருந்தது. மேலும்,இந்த படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா உலகில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். ஆனால், இவர் மக்களிடையே இவ்வளவு பிரபலம் ஆனது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் தான். மேலும்,இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இதையும் பாருங்க : பிறந்தநாளில் புகைப்படத்தை பதிவிட்ட குஷ்புவின் மகள். ஸ்லிம் தோற்றத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்.

- Advertisement -

ஆனால் இவர் தொடர்ந்து நடித்து வரும் படங்களில் கூட முத்தக் காட்சிகளும் பெண்களை காட்சிப் பொருளாக காட்டும் காட்சிகளும் தான் அதிகம் இடம்பெறுகிறது என்று விமர்சனங்கள் எழுந்தது சமீபத்தில் இவரது நடிப்பில் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி இருந்தது அந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி போலவே பெண்களின் பின்னால் சுற்றிக் கொண்டு குடித்துக் கொண்டும் இருக்கிறார் விஜய் தேவர் கொண்டா என்று விமர்சனங்கள் எழுந்தது இந்த நிலையில் விஜய் தேவர் கொண்டா விளம்பரப் படத்தில் ஒன்று நடித்திருந்தார் அந்த விளம்பரமும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சமீபத்தில் மேட்ரிமோனி விளம்பரத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா அர்ஜுன்ரெட்டி படத்தில் வருவது போலவே ஒரு பெண்ணிற்காக அவரது பெற்றோர்களிடம் சண்டை போடுகிறார் ஆனால் அதே விளம்பரத்தில் தனது அவர்கள் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறுகிறா.ர் இந்த விளம்பரத்தை கண்ட ரசிகர்கள் படத்தின் விளம்பரத்தில் ஒரே மாதிரிதானா என்றும், இன்னும் அர்ஜுன் ரெட்டி போதையில் இருந்து மீளவில்லையா என்றும், படத்தில் மட்டும் உருகி உருகி காதலித்து விட்டு விளம்பரத்தில் பெற்றோர் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வீர்களா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளது

-விளம்பரம்-
Advertisement