தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற்ற விஜய்யின் பாடல்.! வேறு எந்த நடிகருக்கு கிடைக்கும்.!

0
2907
Vijay

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் 6 ல் இருந்து 60 வரை இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர்கள் விஜயை பற்றி சிறிய தகவல் வெளியாகினால் கூட அதனை கோலாகலமாக கொண்டாடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போதும் அப்படி தான் தமிழக அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ்மகன் படத்தின் பாடலான முன்னாள் முன்னாள் முன்னாள் முன்னாள் வாடா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த பாடலை கவிஞர் வாலி எழுத ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி பாட புத்தகத்தில் இந்த பாடல் இருப்பது விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களுக்கும் செம்ம ஜாலியாக இருக்கிறது. இந்த பாடல் இசையுடன் இணைவோம் என்ற பாட தலைப்பில் வருகிறது.

ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல் படம் பற்றி cbsc பாட புத்தகத்திலும், தமிழக பாட புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement