நெகட்டிவ் விமர்சனங்களால் வலிமை படக்குழு செய்த மாற்றம் – தன் படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் விஜய் பேசிய விஷயம் தற்போது செம வைரல்.

0
515
valimai
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை.

-விளம்பரம்-

மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். மேலும் வலிமை படம் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வந்தாலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

வலிமை படத்தின் காட்சி குறைக்கப்பட காரணம்:

படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்களும், சினிமா விமர்சனம் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் வலிமை படத்திலிருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நீக்கிய புதிய வெர்ஷன் வலிமை இன்று முதல் திரையரங்களில் திரையிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் 15 நிமிட காட்சியை நீக்க உள்ளதாகவும், நாங்க வேற மாதிரி பாடல் காட்சியும் நீக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய்யின் பீஸ்ட் படம்:

இப்படி வலிமை படத்தில் காட்சிகள் குறைக்கப்பட்டு சினிமாவில் படத்தின் நீளம் குறித்து விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. தற்போது இவர் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சினிமா குறித்து விஜய் சொன்னது:

இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே நடிகர் விஜயின் மேடை பேச்சு அனைவரையும் ரசிக்க வைக்கும். அவர் கூறும் பல விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். அந்த வகையில் ஜில்லா 100வது நாள் வெற்றி விழாவில் விஜய் கூறிய விஷயம் தான் இப்போ வலிமை படத்தின் காட்சிகள் குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அது என்னெவென்றால், விழாவில் விஜய், படத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் சொல்லி முடித்து விடுங்கள். ஏனென்றால், இப்போதெல்லாம் நல்ல படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சென்றால் நேரமாகிறது என்று எல்லோரும் வாட்ஸை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

வைரலாகும் விஜய் பேசிய கருத்து:

ரொம்ப நேரம் படமெடுத்த பாம்பு கூட கீரி இடம் தோற்றுப் போய்விடும். அதனால் அதை மனதில் வைத்துக்கொண்டு இனி படங்களை எடுங்க என்று விஜய் பேசி இருக்கிறார். இப்படி சில வருடங்களுக்கு முன் விஜய் சொன்னது இன்று அஜித்தின் வலிமை படத்தில் நிஜமாகி விட்டது. விஜய் சொன்னது போல தான் வலிமை படத்தை காட்சிகளை குறைத்துள்ளார்கள். தற்போது விஜய் பேசியதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement