எங்க அப்பா அம்மா இல்லனா கூட நான் வந்து இருப்பேன்.! விஜய் அசத்தல் பேச்சு.! வீடியோ இதோ.!

0
283
vijay

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். நடிகர் விஜய்யின் தந்தையும், அம்மாவும் திரை துறை சார்ந்தவர் என்பதால் தான் அவர் சினிமாவில் சுலபாமாக ஒரு நடிகராக வரமுடிந்தது என்று பலரும் கூறி வருகின்றனர்.

என்னதான் நடிகர் விஜய்யை அவரது தந்தை திரைதுறையில் அறிமுகம் செய்தாலும் தனது திறமையாலும், கடின உழைப்பாலும் தான் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இந்த ஒரு இடத்திற்கு வந்துள்ளார் என்பது தான் உண்மை. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய்யின் ரீ வைண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தனது திரை வாழ்க்கைக்கு தனது பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தார்கள் என்று கூறியுள்ள நடிகர் விஜய், ஒருவேளை தனது தந்தை தன்னை சினிமாவில் அறிமுகம் செய்திராமல் இருந்திருந்தால் சில ஆண்டுகள் கழித்து நானே ஹீரோவாக அறிமுகமாகி இருப்பேன் என்று பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ பதிவு