தளபதி 67 படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

Advertisement

இதையும் பாருங்க : விருமன் பட ஷூட்டிங் சூரி மீது வீசப்பட்ட தண்ணீர் கேன் – வலியால் துடித்துள்ள சூரி. அவரே சொன்ன வீடியோ.

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி – தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.

Advertisement

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு:

இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

தளபதி 67 படம்:

இப்படி ஒரு நிலையில் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் கமலின் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயை வைத்து தளபதி 67 என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாகவோ அல்லது வில்லியாகவோ நடிக்கலாம் என கூறப்படுகிறது.

தளபதி 67 படத்தின் வில்லன்கள்:

இந்த நிலையில் தளபதி 67 படத்தில் வில்லன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தில் மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆறு வில்லன்களில் சஞ்சய் தத் மற்றும் பிரித்திவிராஜ் என இரண்டு வில்லன்கள் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நான்கு வில்லன்கள் தேர்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Advertisement