விருமன் பட ஷூட்டிங் சூரி மீது வீசப்பட்ட தண்ணீர் கேன் – வலியால் துடித்துள்ள சூரி. அவரே சொன்ன வீடியோ.

0
387
soori
- Advertisement -

நடிகர் சூரி மீது தண்ணி கேன் வீசியதற்கு அதிதி மன்னிப்பு கேட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

விருமன் படம்:

மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர்.

-விளம்பரம்-

சூரி மீது தண்ணீர் கேன் அடித்த அதிதி:

இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பரத்துக்காக விருமன் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருந்தார்கள். அப்போது பேசிய அதிதி, விருமன் படப்பிடிப்பில் நடிகர் சூரி சார் மீது தண்ணீர் கேன் வீசினேன். அதற்கு நான் காரணம் இல்லை. இயக்குனர் தான் அப்படி செய்ய சொன்னார். அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

விளக்கம் கொடுத்த சூரி:

இதனையடுத்து மேடையில் பேசிய சூரி அவர்கள், எட்டு முறை தண்ணீர் கேனை தூக்கி என் மீது அடித்தார். அந்த காட்சி நடிக்கும் போது வலித்தது. இதற்கு மீது நீ என்மீது அடித்தால் நான் செத்துவிடுவேன் என்று சூரி கூறி அதிதி சங்கர் செய்த சேட்டைகளை எல்லாம் நடித்து காட்டி, அதிதி சொன்ன ஜோக்குகள் எல்லாம் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement