வெளிநாடு செல்லும் விஜய்-வெங்கட் பிரபு, வெளியான தளபதி 68 படம் அப்டேட்- உற்சாகத்தில் ரசிகர்கள்

0
937
- Advertisement -

தளபதி 68 படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் வெளியாகும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி லிஸ்டில் சேர்ந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார்கள்.

தளபதி 68-வது படம்:

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் விஜய் உடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

அமெரிக்கா செல்லும் விஜய்-வெங்கட் பிரபு:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிகர் ஜெயும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக டாடா படத்தின் நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இந்த படத்தினுடைய போட்டோ சூட்சுகளை எடுப்பதற்காக நடிகர் விஜய்யும் வெங்கட் பிரபுவும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார்கள். அதோடு அந்த 3d தொழில்நுட்பத்திற்கான லூக் டெஸ்ட் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement