மெகா ஸ்டார் மம்மூட்டி படத்தில் தெறி படத்தின் மாஸ் காட்சியின் reference. வைரலாகும் வீடியோ.

0
37940
shylock
- Advertisement -

மலையாள மொழியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. நடிகர் மம்முட்டி அவர்களின் உண்மையான பெயர் முகமது குட்டி. இவர் தன்னுடைய நடிப்பு திறனுக்காக பல முறை தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். இதுவரை இவர் 400 திரைப் படங்களுக்கும் மேல் நடித்து உள்ளார். மேலும், இவர் மலையாளம், தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிகர் மம்முட்டி அவர்கள் தமிழில் தளபதி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜூனியர் சீனியர், பேரன்பு என பல படங்களில் நடித்து உள்ளார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு நடிகர் மம்முட்டி அவர்களின் நடிப்பில் வெளி வந்த “மாமாங்கம்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான சரித்திர படம் தான் மாமாங்கம். இப்படத்தை இயக்குனர் பத்ம குமார் அவர்கள் இயக்கி உள்ளார். வேணு முன்னா பிள்ளை அவர்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளார். இந்த படம் 12 வருடங்களுக்கு ஒருமுறை பழரிப் பட்டுவின் நடக்கும் கலாச்சார விழாவை கொண்டாடும் கதையாக கொண்டது. இந்த படத்தில் மம்முட்டி, உன்னி முகுந்தன்,சித்திக், மணிகுட்டன், மணிகண்டன், அனு சித்தாரா, இனியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் நடிகர் மம்முட்டியின் மாமாங்கம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

இதையும் பாருங்க : இதுவரை இத்தனை கிலோ குறைத்து இருக்கார். மேலும், 5 கிலோவை குறைக்க மலேசியா போறார்-பிரசாந்த் தந்தை பேட்டி.

- Advertisement -

நடிகர் மம்மூட்டி, ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடித்த ஷைலாக் என்ற படம் என்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தமிழில் குபேரன் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை மீனா அவர்கள் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இந்த படத்தை அஜய் வாசுதேவ் அவர்கள் இயக்கி உள்ளார். தமிழில் குபேரன் படத்தின் எழுத்து, வசனம், பாடல்கள் எல்லாம் ராஜ்கிரண் அவர்கள் தான் எழுதி உள்ளார்.

 shylock

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த சைலாக் படத்தில் வரும் இடைவேளை காட்சி தளபதி விஜயின் தெறி படத்தில் வரும் இடைவெளி காட்சியைப் போல தெரிகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் விஜய் படத்தை முன் மாதிரியாக வைத்து தான் எடுத்து உள்ளார்களா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 28 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்கிரண்–மீனா இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்து உள்ளார்கள்.

Advertisement