ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய பிஸ்னஸ் - மண்டபத்தை தொடர்ந்து மாஸ்டர் பிளான் போட்ட விஜய்.

By Rajkumar · 27/7/2022

இளைய தளபதி என அழைக்கப்பட்டு தற்போது தளபதி-யாக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கு பிடித்தமான நடிகராக இருப்பதால் ஒவ்வொரு வீட்டிலும் இவருக்கு ஒரு ரசிகர் இருக்கவே செய்வார்கள்.அது மட்டும் வெளி மாநிலங்களிலும் நான் தளபதி ரசிகர் என மார்தட்டி கூறுவோர் இருக்கின்றனர். பிளாக் பஸ்டர் நாயகனான விஜய் பல தொழில்களை நடத்தி வருகிறார். குறிப்பாக சென்னையில் இவருடைய தாயார் ஷோபா, மகன் சஞ்சய், மனைவி சங்கீதா ஆகியோரின் பெயர்களில் பல திருமண மண்டபங்களை நடிகர் விஜய் நிர்வகித்து வருகிறார்.

அதையும் தாண்டி பல ஊர்களில் பல தொழிலும் செய்து வருகிறார். இவர் செய்யும் இவருக்கு பிடித்தமான தொழில் திருமண மண்டபம். சென்னையில் சாலிகிராமத்தில் ஷோபா திருமண மண்டபம் வடபழனி இல் ஒரு திருமண மண்டபம். அடுத்து போரூரில் சங்கீதா திருமணம் என்று மனைவியின் பெயரில் நடத்தி வருகிறார்.இது மட்டுமில்லாமல் புதுக்கோட்டையில் திருமண மண்டபம் வைத்துள்ளார். இன்னும் பலமாவட்டங்களில் திருமண மண்டபங்களை நடத்தி வருகிறார்.

இதையும் பாருங்க : இது தெரியாமலேயே நடிச்சிடீங்களா ? - பயில்வான் கேட்ட கேள்வியால் கடுப்பான துல்கர் சல்மான். வைரலாகும் வீடியோ.

சர்கார் படம் பிரச்சனையில் சர்சைக்கு உள்ளான விஜய் மண்டபங்கள் :-

மிக்ஸி, கிரைண்டர் வைத்து சக்சஸ் பார்ட்டி கொண்டாடியதற்கு, விஜய்யின் கல்யாண மண்டபங்கள், சென்னையிலுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை சட்டரீதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்த ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. அரசு. படங்களில் நீதி, நேர்மை குறித்து ஆவேசமாக வசனம் பேசி நடிக்கும் விஜய் பொது வாழ்வில் நேர்மையற்றவர். படங்களுக்கு வாங்கும் சம்பளங்களில் முக்கால்வாசியை கருப்புப் பணமாகத்தான் வாங்குகிறார் என்று மேடைகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் முழங்கினார்கள். அடுத்த கட்டமாக அவரின் முதல் சிக்கலுக்கு ஆளாகியிருப்பவை விஜய்யின் திருமண மண்டபங்கள். விஜய் வெளிப்படையாக சென்னையில் வடபழனி குமரன் காலனி, அருணாச்சலம் சாலை மற்றும் போரூர் பகுதிகளில் மூன்று திருமண மண்டபங்கள் வைத்திருக்கிறார். இவற்றுக்கு முறையான பத்திரப்பதிவுகள் உள்ளதா, மாநகராட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா வேறென்ன வில்லங்கங்கள் உள்ளன என்று திருமண மண்டபங்களுக்கு குடைச்சல் கொடுத்தார்கள்.

விரைவில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டாக மாறபோகும் விஜய் திருமண மண்டபங்கள் :-

சென்னையில் உள்ளத் திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை 8 லட்சத்திற்கு 15 வருட ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். இப்பொழுது இந்த திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு மாத வாடகை 12 லட்சத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடப் போவதாக தெரிகிறது. இன்னும் சில மண்டபங்களை இதேபோல் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு விஜய் யோசித்து வருகிறாராம்.இதை பற்றி தெவிவான விளக்கத்துடன் செய்திகள் இன்னும் வெளி வரவில்லை. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ செய்திகள் வரலமாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதில் அரசியல் உள்குத்து உள்ளதா :-

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் என்ற இடத்தில் உள்ள விஜய்க்கு சம்பளம் 120 கோடி. வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே வெளியிடுகிறார். இவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து அரசியல் கணக்குகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.இது அரசியல் ரீதியான நகர்வு என்று பேசப்படுகிறது. எதற்கு ரிலையன்ஸ்னிடம் திடீரென்று விஜய் அவர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார் என்று அனைவரையும் சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு ஈடுபடுவது அரசியல் வேலையை வேகமாக தொடங்குவதாக ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.விஜய்யின் ஒவ்வொரு முயற்சியும் அவர் ஏற்கனவே புதுவை முதல்வர், ஆந்திர முதல்வர், பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்து இப்பொழுது ரிலையன்ஸ்னிடம் கூட்டு சேர்வது விஜய் ஏதோ செய்யப்போகிறார் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full