இது தெரியாமலேயே நடிச்சிடீங்களா ? – பயில்வான் கேட்ட கேள்வியால் கடுப்பான துல்கர் சல்மான். வைரலாகும் வீடியோ

0
329
- Advertisement -

பிரஸ்மீட்டில் பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வியால் துல்கர் சல்மான் கடுப்பாகி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை போல மலையாள சினிமாவில் கூட வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானும் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து. பின் இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப் படத்தில் நடித்தார். அந்த படமும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

துல்கர் சல்மான் திரைப்பயணம்:

அதே போல இவரது நடிப்பில் தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஹே சினாமிகா’ போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இப்படி இவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் துல்கர் நடிப்பில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் சல்யூட். இந்த படத்தை வே பாரர் பிலிம்ஸ்- துல்கர் சல்மான் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

சீதா ராமம் படம்:

தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சீதா ராமம். இந்த படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தினை வைஜெய்ந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். தற்போது இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியிட இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிரஸ் மீட்டில் பயில்வான் கேட்ட கேள்வி:

இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரத்திற்காக துல்கர் சல்மான் சென்னை வந்துள்ளார். இந்த படத்தை குறித்து பயில்வான் கேட்ட கேள்விக்கு துல்கர் சல்மான் கடுப்பாகி இருக்கிறார். அதாவது, உங்கள் பெயர் படத்தில் ராமம் என்று சொன்னீர்கள்? என்ன அர்த்தம் என்று கேட்டார். அதற்கு துல்கர் சல்மான், சீதா ராம் என்பதை அவர்கள் இணைத்து வைத்து விட்டார்கள் என்று சொன்னார். பின் பயில்வான், நான் அதைக் கேட்கவில்லை ராமம் என்றால் என்ன அர்த்தம்? எனக்கு அதற்கான காரணம் தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

துல்கர் சல்மான் கடுப்பாக காரணம்:

உடனே கண்டிப்பாக தெரிந்து ஆக வேண்டுமா? என்று துல்கர் சல்மான் சொல்லி, இந்த கதையை, பெயரை நான் எழுதவில்லை. இயக்குனரும் இப்போது இல்லை. அவர் இருந்திருந்தால் பதிலளித்து இருப்பார் என்று சொல்கிறார். அதற்கு பயில்வான், பெயர் அர்த்தம் தெரியாமலேயே படத்தில் நடித்து விட்டீர்களா? என்று நக்கலாக கேட்கிறார். உடனே துல்கர், படம் எடுக்கும்போது பெயர் வைக்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு தான் படத்திற்கு டைட்டில், பெயரெல்லாம் வைக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு துல்கர் சல்மான் பதிலளித்திருக்கிறார்.

Advertisement