தளபதி விஜய் சினிமா நடிப்பிலிருந்து விலகி இருப்பதாக இயக்குனர் அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துஇருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்துஇருந்தார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜயும் சிக்கி கொள்கிறார். இறுதியில் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தது.
பீஸ்ட் குறித்த விமர்சனங்கள்:
நெல்சன் பேச்சையும், பீஸ்ட் படத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். ஆனால், பீஸ்ட் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். வம்சி தமிழில் ஏற்கனவே தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
தளபதி 66 படம்:
இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படங்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்று இருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.
தளபதி 66 படம் குறித்த தகவல்:
மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார். ஏற்கனவே இந்தபடத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும், சில நாட்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தைப் பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. ஆனால், விஜய் படத்தை ஒரு சிறந்த படமாக ரசிகர்களுக்கு வழங்க முடியும் என நம்புகிறேன் என்று இயக்குனர் கூறி இருக்கிறார். இந்நிலையில் விஜய் நடிப்பில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் மில்டன் அளித்த பேட்டி:
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் விஜய் மில்டன். விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அப்போது விஜயுடன் இவர் ரொம்ப நெருங்கிய நண்பராக இருந்தார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், தன்னிடம் விஜய் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை. 2000 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராக போகிறேன் என்று சொன்னார். ஆனால், தற்போது விஜய் அதைப் பற்றி யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு நடிகராகி விட்டார் என்று விஜய் மில்டன் கூறி இருக்கிறார்.