முதன் முறையாக தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா.

0
123447
Bhavana
- Advertisement -

தற்போது பிரபல தொகுப்பாளினி பாவனா அவர்கள் தன்னுடைய திருமண நாளை கொண்டாடும் விதமாக தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் போட்டு உள்ளார். மேலும், தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் பாவனாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?? என அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று கூறி வருகிறார்கள். பிரபலமான சேனல் நிறுவனங்களில் விஜய் டிவியும் ஒன்று. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளும் மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை பெயர் மாற்றம் செய்து மற்ற சேனல்களில் ஒளிபரப்பு செய்து உள்ளார்கள். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தொகுப்பாளினி பாவனா.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வந்த பாவனா அவர்கள் ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் தான் தொகுப்பாளினியாக இருந்தார். டிடிக்கு அடுத்தது என்று கூட சொல்லலாம். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பாவனா அவர்கள் சில ஆண்டுகளாகவே விஜய் டிவியில் இருந்து விலகி உள்ளார். இதனை தொடர்ந்து தொகுப்பாளினி பாவனா ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சென்று உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது.

இதையும் பாருங்க : ஓய்ந்த ‘பிகில்’ சத்தம். இணையத்திலும் வெளியாக தடை. சோகத்தில் ரசிகர்கள்.

- Advertisement -

மேலும், இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் கூட மிக வேகமாக பிரபலம் அடைந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் தனியாக இசை ஆல்பங்கள் பாடுவது, அதில் நடிப்பது என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சமீப காலமாகவே தொகுப்பாளினி பாவனா குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி பாவனா அவர்கள் தனது திருமண நாளை கொண்டாடி உள்ளார். மேலும், அவர் தனது திருமண நாளன்று தன் கணவருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தொகுப்பாளினி பாவனா அவர்கள் முதன் முறையாக அவருடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் என்ற தகவல் உள்ளது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement