டிடி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி “எங்கிட்ட மோதாதே” இப்படிப்பட்ட நிகழ்ச்சியா ?

0
1341
dd
- Advertisement -

விஜய் டீவி யில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருவர்கள் .அதில் சில மற்ற சேனல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூட இருக்கும். இருப்பினும் ஒரு சில நிகழ்ச்சிகள் பல எபிசோட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

-விளம்பரம்-

dd

- Advertisement -

இந்நிலையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி காபி வித் டிடி .இதில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.மேலும் டிடி இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வந்திருந்தார்.

விஜய் டிவி நடத்தும் எல்லா விருது வழங்கும் விழாக்களிளும் டிடி பங்குபெறமால் இருக்க மாட்டார். அந்த அளவிற்கு டிடி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்துவந்தவர், டிடி எத்தனையோ தொகுபாலினிகள் வந்தால் கூட டிடிகென்று விஜய் டிவியில் தனி இடமுள்ளது.

-விளம்பரம்-

DD

இந்நிலையில் காபீ வித் டிடி-க்கு பிறகு விஜய் டிவியில் அன்புடன் என்ற நிகழ்ச்சியிலும் தொகுபாளினியாக இருந்து வந்தார், ஆனால் அந்த நிகழ்ச்சி ஒரு சில மாதத்திலேயே நிறுத்திவிட்டனர். தற்போது விஜய் டிவி டிடி எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக மாறிவிட்டார் டிடி.விஜய் டிவியில் வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

ஆனால் புதுவிதமான கேம் ஷோவாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்த்தால் இவர்கள் அரைத்த மாவையே அரைப்பது போல விஜய் டிவி யில் உள்ள பிரபலங்களை அழைத்து வந்து அவர்களுக்கு சில போட்டிகளை வைக்கின்றனர். அதிலும் அந்த போட்டிகளும் டாஸ்குகளும் பார்ப்பதற்கு மிகவும் காமெடியாக உள்ளது.

Dhivyadharshini

ஏற்கனவே விஜய் டிவியில் வித்யாசமான நிகழ்ச்சி என்ற பெயரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் என்டெர்ட்டைன்மண்ட் என்று இவர்கள் அடிக்கும் லூட்டியை சகிக்கமுடியவில்லை.

Advertisement