2008-ல் எடுத்த புகைப்படம்.! லைக்ஸ் குவியுது டிடி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.!
விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான். சமீபத்தில் இவரது 20 ஆண்டுகால தொகுப்பாளினி பணியை பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என்ற விழாவும் கொண்டாடப்பட்டது.
https://www.instagram.com/p/B2_OBrUD6vW/?igshid=1mc6o3bn77s9g
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.
இதையும் பாருங்க : வெளியேற்றபட்ட தர்ஷன்.! ட்ரெண்டிங்கில் வந்த விஜய் டிவிக்கு எதிரான மோசமான ஹேஷ் டேக்.!
சின்னத்திரையில் வருவதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் நடித்து வந்தார் டிடி. மேலும், பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமா நடித்துள்ளார்.எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் டிடி தனது மேககப் இல்லா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.அந்த வகையில் சமீபத்தில் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.