தென்னிந்திய சினிமா துறை உலகில் உள்ள நட்சத்திரங்களில் பிரபலமானவர் கமலஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார்.தமிழ் சினிமா துறையில் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் இவரை அடிச்சிக்க ஆளில்லை என்று கூட சொல்லலாம். இவர் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி தொடங்கியது தான் இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

மேலும், இவர் தமிழ்,இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் இந்திய சினிமா துறையில் ஆற்றிய பணிக்காக பத்மபூஷன்,பத்மஸ்ரீ, செவாலியே விருது என பல விருதுகளை வாங்கியுள்ளார்.தற்போது இந்தியாவில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பங்காற்றி வருகிறார்.இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் திரை உலகிற்கு வெளிவந்த “இந்தியன்” படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

இதையும் பாருங்க : குடித்து விட்டு காரில் விபத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை.! காயமடைந்தவர் நிலைமை என்ன தெரியுமா.!

Advertisement

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திலும் நம்ம உலக நாயகன் தானே ஹீரோவாக இருக்க முடியும். மேலும் ,இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்கள். ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.ஆனால், சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது என தகவல் வெளிவந்து. மேலும், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, பொமன் ராணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது. அதத்தான் ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருபவர்தான்’ சங்கர் என்று திரையுலகில் பேசப்பட்டு வரும் அளவிற்கு பிரபலமான இயக்குனர்.

மேலும் இந்த படம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னால் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் கூறி உள்ளார்கள் படக்குழுவினர்.அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத்,வித்யூத் ஜாம்வால்,சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.இந்த வரிசையில் தர்ஷன் இந்தியன் 2 வில் இருக்கார்னு ஒரு செய்தி வந்துச்சி ஆனா அது இல்லனு அவருடைய நண்பர் சத்யா சொல்லிட்டாரு. மேலும் , ஜெகன் அவர்கள் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

Advertisement

ஜெகன் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும், தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் படத்தில் ‘சிட்டிபாபு’ என்ற கதாபாத்திரத்தில் மக்களிடையே அதிக அளவு பேசப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் அனேகன், நான் சிகப்பு மனிதன், இரும்பு குதிரை போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கமலஹாசனின் இந்தியன்2 படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும், இந்தியன் 2 படம் குறித்து பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் இணையங்களில் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Advertisement
Advertisement