தமிழ் சினிமா துறை உலகில் ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். மேலும், தமிழ் சினிமாவிலும் அதிக அளவு பிரபலமானார் மற்றும் இந்த ஒரு படத்திலேயே அதிக அளவிற்கு பிரபலமானவர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம். அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது யாசிக்க அவர்கள் மகத்தை காதலிப்பதாக கூறிய சர்ச்சை ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் வெளியே வந்தவுடன் அது குறித்து எந்த தகவலும் அவர்கள் பதிவிடவில்லை.மேலும், அவர் தனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாகவும் விளையாடினார். மேலும், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரொம்ப பிசியாக இருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
இதையும் பாருங்க : பிக் பாஸ் பட்டத்தை வென்றது இவர் தான்.! ட்வீட் செய்த டாப் 10 சுரேஷ்.! இவர் சொன்னா சரியா தான இருக்கும்.!
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் மது அருந்தி விட்டு கார் ஓட்டி வந்தார் என்றும், சாலையோரம் நின்றிருந்த இளைஞர் மீது மோதினார் என்றும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது குறித்து கூறுகையில்,சனிக்கிழமை அன்று நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் தன்னுடைய நண்பர்களுடன் சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் சாலையில் சொகுசு காரை ஓடிவந்தார். மேலும்,அந்த நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் வந்து கொண்டிருந்த போது தன்னுடைய சொகுசு கார் நிலை தடுமாறினார்.
மேலும்,அந்த சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவரின் மீது வண்டியை மோதினார். அதுமட்டுமில்லாமல் அவர் அங்கு இருந்த கடை ஒன்றின் மீதும் காரை மோதி மோதினார்.இதனால் ஊழியர் பரத் பயங்கரமாக படுகாயமடைந்தார். மேலும், அவரை சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும்,நடிகை யாஷிகா ஆனந்த் நன்றாக மது அருந்திவிட்டு கார் ஓட்டும் தன் நிலையை இழக்கும் அளவிற்கு கட்டுப்பாட்டை இழந்து உள்ளார்.அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் கூறினார்கள். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த்தும்,அவருடைய நண்பர்களும் விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்து மர்மமாக மறைந்து விட்டனர் என்று கூறப்படுகிறது. மேலும் காரை ஓட்டி வந்தவர்கள் மது அருந்தி தான் வந்திருக்கிறார்கள் என்று உறுதியாக தெரிகிறது. மேலும் ,இந்த விபத்து பற்றி சினிமா திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யார் மீது வழக்கு தொடரப்படும்? வழக்கு போடுவது இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றன.அதுமட்டுமில்லாமல் அந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த் தான் என செய்திகள் வெளிவந்தன.