பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகிறதா ? லேட்டஸ்ட் வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி.

0
13526
bharathi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. இந்த சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகிறதா? என்று சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் எழுந்து வந்த வண்ணம் உள்ளன. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்த்து அடுத்து என்ன என்ன என்று பல எதிர்பார்ப்புகளுடன் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பல எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடிய சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியல் முடியவே இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அந்தளவிற்கு இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. மேலும், தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தன்னிடமிருக்க இன்னொரு குழந்தை எங்கே இருக்கிறது என்று கண்ணம்மா தெரிந்துகொள்ள பல முயற்சிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையை வெண்பா பயன்படுத்திக் கொள்கிறார். பின் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் எக்குத்தப்பா பாரதியிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இப்படி பல திருப்புமுனைகளுடன் இந்த சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் பாரதி மனம் மாறி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ளுமாறு தன் பெற்றோர்களிடம் பேசி உள்ளார். தற்போது இந்த ப்ரோமோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனால் இன்னும் சில வாரங்களில் பாரதிகண்ணம்மா முடிவுக்கு வந்து விடுமோ? என்று பார்வையாளர்கள் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். அதோடு இந்த மாதிரி ப்ரோமோவை காமித்து விட்டு பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிய மாதிரி பாரதி பழையபடி கண்ணம்மா மீது கோபமாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும். மொத்தத்தில் இந்த வாரம் தொடர் வேற லெவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement