9 ஆம் ஆண்டு திருமண நாளில் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா.

0
3335
bhavana
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி துவங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி களில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார். சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

- Advertisement -

அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார்.மேலும், இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் கூட மிக வேகமாக பிரபலம் அடைந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் தனியாக இசை ஆல்பங்கள் பாடுவது, அதில் நடிப்பது என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட ‘இரண்டாம் குத்து’ படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தார் பாவனா. பலருக்கும் பாவனாவுக்கு திருமணம் ஆகியிருப்பது பற்றி தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், இரண்டு, மூன்று ஆண்டுகள் இருக்கும் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே பாவனாவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. இந்த நாளில் தனது கணவரோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement