விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.
திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் டிடி. அந்த வீடியோவில் ஆங்கில பாடலுக்கு வெஸ்டர்ன் உடை அணிந்து டிடி நடனமாடி கொண்டிருக்கும் போது குடும்பத்தில் இருந்த ஒரு நபர் செருப்பை தூக்கி செம வேகமாக டிடியை தாக்குகிறார். அதற்கும் வடிவேலு வசனத்தை போட்டு என் குடும்பம் எப்படி அடிச்சிருக்காங்கன்னு பாருங்க என டிடி வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.