இங்க இருக்க ஒரு ஆம்பள கூட இந்த ட்ரெஸ்ஸ பாத்து எதுவும் சொல்ல – பீச் ட்ரெஸ்ஸில் முக்கிய கருத்தை சொன்ன டிடி.

0
5083
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார் டிடி. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

சமீப காலமாகவே டிடி பல விதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதே போல டிராவல் பிரியரான இவர் அடிக்கடி சுற்றுல்லா செல்வது வழக்கம். சமீபத்தில் கூட மாலத்தீவிற்கு சென்று பல விதமான புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அந்தமானுக்கு சுற்றுல்லா சென்றுள்ளார். அங்கே கடற்கரையில் அமர்ந்த வாறு பீச் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இதையும் பாருங்க : ரெண்டு கல்யாணம் பண்ணுனப்போ குஜாலா இருந்துச்சோ – செல்வராகவன் ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

முதன் முறையாக டிடியை இப்படி ஒரு கிளாமர் கோலத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் ஷாக்கடைந்து உள்ளனர். ஆனால், இந்த புகைப்படத்தை பதிவிட்டு கருத்து சொல்லியுள்ள டிடி, ஆடையில் ஒன்றும் கிடையாது நம் மனநிலையில் தான் உள்ளது. அந்தமானில் இருக்கும் ஒரு ஆண்கள் கூட இந்த உடையை அணிந்து கொண்ட எனக்கு பாதுகாப்பு இல்லாமலோ இல்லை அசௌகரியமான உணர்வையோ கொடுக்கவில்லை.

உலக சுற்றுலா தினமான இன்று நான் விரும்புவது, பெண்களும் இரட்டை பாலினத்தவர், தங்கள் கனவுகளை நோக்கி பயணம் செய்யும்போது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஊரடங்கு காரணத்தினால் சுற்றுலா துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை நம்பி பல உயிர்கள் இருக்கிறது. அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement