மேக்கப் இல்லாம Filter போட்டே பாக்க முடியல – டிடியை கேலி செய்யும் நெட்டிசன்கள்.

0
3275
dd
- Advertisement -

எப்போதும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று இவரைச் சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும்,தொகுப்பாளினி டிடிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. திவ்யதர்ஷினி அவர்கள் தனது நீண்ட நாள் காதல் கணவரை திருமணம் செய்து கொண்டார். பின் திருமணம் ஆன குறுகிய மாதங்களிலேயே திவ்யதர்ஷினிகும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

- Advertisement -

பின் இருவரும் பிரிய முடிவெடுத்து 2017 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார் டிடி. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினி டிடி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். அதில் தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் டிடி, தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் வெளியான ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து இருந்தார். இந்த வீடியோவில் டிடி மேக் இல்லாமல் இருந்ததால் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement