எப்போதும் நான் உங்க வீட்டு பொண்ணு – துளியும் மேக்கப் இல்லாமல் டிடி வெளியிட்ட புகைப்படம்.

0
1007
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 20 வருடங்கள் என்கிற நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். எத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார்.

-விளம்பரம்-

டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அது மட்டும் இல்லைங்க இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்று உள்ளார். ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள். இவர் தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்.

- Advertisement -

இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அங்கு நம்ம திவ்யதர்ஷினி பெயர் தான் முதலில் வந்து நிற்கும்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டான்ஸ் சூப்பர் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும், ஸ்பீட் கோ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is tt-make.jpg

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவரத் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள டிடி எப்போதும் உங்கள் வீட்டு பொண்ணு என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து சிலர் கேலி செய்து வந்தாலும் ஒரு சிலர் நீங்கள் மேக்கப் இல்லாமலும் அழகு தான் என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement