விவாகரத்து கிடைத்த நாள் அன்று கூட கோர்ட்டுக்கு காலையில் - விவாகரத்து குறித்து டிடி.

By Rajkumar · 6/3/2020

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர் இந்த நிலையில் தன்னுடைய காதல் முறிவு குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் டிடி.

இதையும் பாருங்க : அவருக்கு முதலில் காசு கொடுத்து ஈவென்ட்க்கு அனுபிச்சது நான் தான். பிரபல நடிகை பேட்டி.

அதில் உறவு என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் சூழ்நிலை காரணமாக லவ் உடையவும் செய்யும் சிலர் நம்மை ஆதரிப்பார்கள் சிலர் நம்மை கீழே தள்ளி விடுவார்கள் அந்த பிரிவு கண்டிப்பாக கஷ்டப்படுத்தும். என் லவ் ஏன் உடைஞ்சதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அதை கொஞ்ச நாள் நம்மிடம் வைத்துக்கொண்டு அதன் பின்னர் அதனை தள்ளி வைத்துவிட்டு அடுத்தது என்ன என்பதை பார்த்துவிட்டு போய்விடவேண்டும் அப்படித்தான் அனைவரும் போக வேண்டும் என்று நினைக்கிறேன்.அதுபோன்றுதான் நானும் செய்தேன் அவங்களோட வாழ்க்கையில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

அங்க வருங்கால வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு அதைப்பற்றி எதுவும் யோசிப்பதும் இல்லை, பேசியதும் இல்லை. விவாகரத்து கிடைத்த நாள் அன்று கூட கோர்ட்டுக்கு காலையில் போகவேண்டும் என்றுதான் உள்ளே ஓடிக்கொண்டிருந்தது. கடைசியாக அனுப்பிய மெசேஜ்க்கு பின்னர் தற்போது வரை எதுவும் நான் அனுப்பவில்லை பேசவில்லை நேரில் பார்க்கவில்லை என்ன ஆனாலும் வாழ்க்கையில் செல்லத்தான் வேண்டும் எனக்கு கிடைத்த இந்த வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று உருக்கமுடன் கூறியுள்ளார் டிடி

Tamil Behind Talkies AMP · Quick view
View full